Sunday, 24 August 2014

Tata Nano twist tamil

டாட்டா நானோ ட்விஸ்ட் ஓர் அறிமுகம் 

டாட்டா நானோ ட்விஸ்ட் சமீபத்தில் பங்களாதேஷ்  தலைநகரான டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது .இதழ் தொடக்க விலை 6.23 லட்சங்களாக அங்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

நானோ ட்விஸ்ட் பங்களாதேஷில் நிடோல் நோலாய் குரூப் மூலமாக விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது பவர் ஸ்டிரிங்  வசதியுடன் வருகிறது.இது டெல்லி எக்ஸ் ஷோ ரூமில் 2.34 லட்சங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷ்கும் டெல்லி ஷோரூமுக்கும் உள்ள விலை வித்தியாசம் கண்டிப்பாக பலரது புருவங்களை உயர்த்தும்.அதற்கு காரணம் அங்கு  விதிக்கப்படும் 45%  துணை வரியே ஆகும்.டாட்டா தனது கார்களை
இந்தியாவிலிருந்து  ஏற்றுமதி செய்கிறது .இந்த விலை வித்தியாசம் அங்கு டாட்டா தனது சொந்த ஆலையை திறக்கும் வரை நீடிக்கும்.



டாட்டா நானோ ட்விஸ்ட் ஒரு சிறிய ரக ஹட்ச்பாக் கார் வகை ஆகும்.இது நகர பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படுள்ளது.வாகன நெரிசலை தவிக்கவும் கார் பார்கிங் எளிதாக செய்யவும் உதவும் .
இது 624 cc இரண்டு சிலிண்டர் கொண்ட என்ஜினுடன் வரும் என தெரிகிறது .இதன் குதிரை திறன் 
37.4 bhp ஆகவும் இதன் டார்க் 51Nm ஆகவும் இருக்கும் என தெரிகிறது .

டாட்டா நானோ உலகின் விலை குறைந்த கார் என்ற கண்ணோட்டத்தில்  இருந்து எளிதாக இயக்க உதவும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது .

இதன் மற்ற சிறப்பம்சங்கள் 
பவர் விண்டோ 
பூட்டப்படக்கூடிய கையுறை பெட்டிகள்
மேம்படுத்தப்பட்ட மியூசிக் சிஸ்டம் 

இது கண்டிப்பாக இந்தியாவில் நடுத்தர மக்களிடையே வாங்கப்படும் என்று நம்பப்படுகிறது .

டாட்டா நானோ த்விச்டின் இதர சில படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.click here 

No comments:

Post a Comment